search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்"

    • இறுதி போட்டியில் ஜப்பானின் அமி இஷி அதிரடியாக விளையாடி தங்கம் தட்டி சென்றார்.
    • இந்திய வீராங்கனை பிரியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஜப்பானின் மிஜுகி நாகஷிமாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    ஆஸ்தானா:

    கஜகஸ்தானின் ஆஸ்தானா நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான 68 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா கலந்து கொண்டார்.

    அவர் போட்டியில் 10-10 என்ற புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனையான தெல்கர்மா என்க்சாய்கானை காலிறுதி போட்டியில் வீழ்த்தி முன்னேறினார். அரையிறுதி போட்டியில் சீனாவின் பெங்ஜாவை வீழ்த்தினார்.

    எனினும் இறுதி போட்டியில் ஜப்பானின் அமி இஷி அதிரடியாக விளையாடி தங்கம் தட்டி சென்றார். நிஷா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று மகளிருக்கான 76 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை பிரியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஜப்பானின் மிஜுகி நாகஷிமாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இதனால், இந்தியாவின் பதக்கம் 6 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு, ரூபின் (55 கிலோ) வெள்ளி பதக்கமும், நீரஜ் (63 கிலோ), விகாஸ் (72 கிலோ) மற்றும் சுனில் குமார் (87 கிலோ) வெண்கல பதக்கங்களும் வென்று உள்ளனர்.

    சீனாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 16 பதக்கங்களுடன் 8-வது இடம் பிடித்துள்ளது. #AsianWrestlingChampionships
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சீனாவில் கடந்த 23-ந்தேதி தொடங்கி இன்றுவரை நடைபெற்றது. இதில் இந்தியா 1 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கல பதக்கம் வென்று தரவரிசையில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் நான்கு வெண்கல பதக்கங்களை வீராங்கனைகள் வென்றனர். வீரர்கள் 12 பதங்கங்களை வென்றனர்.



    ஈரான் 11 தங்கம், 6 வெண்கலம் உள்பட 17 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், சீனா 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 4 தங்கம் உள்பட 17 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
    ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த சாக்‌ஷி மாலிக், வினேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். #AsianWrestlingChampionships
    ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக் வடகொரியாவைச் சேர்ந்த கிராப்ளரை 9-6 என வீழ்த்தி பதக்கம் வென்றார்.

    5 கிலோ எடைபிரிவில் வினேஷ் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற குயியன்யு பங்க்-ஐ 8-1 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.


    வினேஷ்

    இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்றுள்ளது.
    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை மஞ்சு குமாரி வெண்கல பதக்கம் வென்றார்.
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சீனாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 59 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மஞ்சு குமாரி வெண்கலத்திற்கான போட்டியில் வியட்நாம் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் 11-2 என மஞ்சு குமாரி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
    சீனாவில் இன்று தொடங்கிய ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். #BajrangPunia
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் இன்று தொடங்கியது. இன்றில் இருந்து வருகிற 28-ந்தேதி வரை இந்தத் தொடர் நடக்கிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் சயாட்பெக் ஒகாஸ்சோவ்-யை எதிர்கொண்டார்.

    ஒரு கட்டத்தில் பஜ்ரங் புனியா 2-5 என பின்தங்கியிருந்தா். அதன்பின் சிறப்பாக செயல்பட்டு இறுதியில் 12-7 என வெற்றி பெற்று தங்கம் வென்றார். இவர் ஏற்கனவே 2018 ஆசிய போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×